இந்த படம் ஆங்கில டிராமா வகையை சேர்ந்தது. பிளாக் அன் வொய்டில் எடுக்கப் பட்டது. இந்த படத்தின் கதையைப் பார்க்கும் முன்னர், அமெரிக்காவில் கோர்ட் சிஸ்டம் இயங்கும் முறையைப் பார்ப்போம். நம்ம ஊரில் எந்த ஒரு வழக்குக்கும் நீதிபதிதான் தீர்ப்பு வழங்குவார். அமெரிக்காவில் ஜூரி என்ற பெயரில், பொதுமக்களில் இருந்து 12 பேரைத் குலுக்கல் முறையில் தேர்ந்து எடுப்பார்கள்.
அந்த 12 பேரும் முழு வழக்கு விசாரணையை கவனித்து, வக்கீல்களின் வாதங்களை கேட்டு வழக்கு முடிவில் தீர்ப்பு கொடுப்பார்கள். 12 பேரும் ஒத்துக் கொள்வதுதான் தீர்ப்பு. 12 பேரில் ஒருவரை "Foreman" என்று தேர்ந்து எடுப்பார்கள். அவர் மற்ற ஜூரிகளுக்கு தலைவர் போல வழி நடத்தி, தீர்ப்பு கொடுப்பதை உறுதி செய்வார்.
படத்தின் கதை இதுதான். ஒரு 18 வயது பையன், அவனது தந்தையை கத்தியால் குத்தி கொன்றதாக வழக்கு. வழக்கு விசாரணையும் முடிந்து விட்டது. தீர்ப்பு மட்டும் தான் கொடுக்க வேண்டியது. எல்லா ஆதாரங்களும் பையன் கொலை செய்ததாகவே காட்டுகிறது. எல்லா ஜூரிகளும் (ஒருவர் தவிர) பையன் கொலை செய்ததாக நம்புகிறார்கள். படத்தின் ஆரம்பத்தில் நாம் கூட பையன் தான் கொலை செய்திருப்பான் என நம்புகிறோம். ஒட்டெடுப்பு ஆரம்பிக்கிறது. ஆச்சரியமாக ஒரு ஜூரி மட்டும் பையன் கொலை செய்யவில்லை என வோட்டு போடுகிறார். மற்ற எல்லோரும் அவர் மீது கோபப்படுகிறார்கள். ஆதாரங்கள் என்னவோ பையன் குற்றவாளி என காட்டினாலும், அதைப் பற்றி விவாதிக்காமல் முடிவு எடுக்கக்கூடாது என்கிறார். படம் போகப்போக எல்லா ஆதாரங்களும் உண்மை அல்ல என்று ஒவ்வொரு ஜூரியாக உணர்கிறார்கள். ஒவ்வொருவரும் பையன் கொலை செய்திருக்கலாம் என்பதில் சந்தேகம் உள்ளது என்பதை உணரும் காட்சிகள் நன்றாக எடுக்கப் பட்டுள்ளன.
படம் முழுக்க ஏறத்தால ஒரே ஒரு அறையில் வைத்துதான் எடுக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் சுவாரசியத்திற்கு கொஞ்சம் கூட குறைவில்லை. 12 பேருடைய பின்ணனிகள், அதன் காரணமாக அவர்கள் எடுக்கும் முடிவுகளும் நல்ல காட்சியமைப்பு. ஒருவருக்கு அன்று இரவு பேஸ்பால் மேட்ச் பார்க்கப்போகவேண்டிய அவசரம். அதனால் சீக்கிரம் தீர்ப்பு சொல்லிவிட்டு போகலாம் என நினைக்கிறார். அவர் மனம் மாறும் காட்சி நல்ல திரைக்கதை அமைப்பு. நல்ல திரைக்கதை இருந்தால் ஒரே ஒரு அறையிலேயே சுவாரசியமான படத்தைக் கொடுக்க முடியும் என்பதற்கு இந்த படம் சாட்சி.
படத்தின் trailer இதோ.
இந்த படம் 1997 ல் மீண்டும் ரீமேக் செய்யப்பட்டது. படம் டவுன்லோட் செய்யப்போகிறீர்கள் என்றால், 1957 வருடத்து படமா என பார்த்து எடுக்கவும்.
படம் பார்த்து விட்டு உங்கள் கருத்தை சொல்லுங்கள்.
2 comments:
I am not able to see the trailer section at all....i mean it is simply blank...
கொஞ்சம் பழைய படமென்றாலும் அருமையான படம்.உலக சினிமா ரசிகர்கள் அனைவரும
கட்டாயம் பார்க்கவேண்டிய அருமையான திரைப்படைப்பு.அதை உங்கள்
எழுத்துக்களின் வழி மேலும் சுவைச்
சேர்த்ததற்கு நன்றிகள் பல.
Post a Comment