Wednesday, September 28, 2011

Flipped (2010)/உலக சினிமா/அமெரிக்கா - ஆங்கில பட விமர்சனம்.


உங்களுக்கு ஆங்கில டிராமா படங்கள் பார்க்க பிடிக்கும் என்றால், இது மிகவும் பார்க்கவேண்டிய படங்களில் ஒன்று. படத்தின் கதை இதுதான்.

சிறுதுளிகள் - (28/09/2011) - புதன்

பெரும்பாலான நேரங்களில், மனம் வாழ்க்கை என்பது ரொம்பவுமே சீராக செல்ல வேண்டும் என்று எதிர்பார்க்கிறது. அப்படி இல்லாத போது சங்கடப்படுகிறது. கிரிக்கெட் பார்ப்பதில் உங்களுக்கு நல்ல விருப்பம் என்று வைத்துக்கொள்வோம். இந்தியா - பாகிஸ்தான் மேட்ச். இந்தியா முதலில் பேட் செய்கிறது. விக்கெட்கள் மடமடவென சரிந்து கொண்டு இருக்கிறது. 5 விக்கெட்டுக்கு 60 ரன். 20 ஓவர் முடிந்து விட்டது. சச்சின் மற்றும் புதுமுகம் ஒருத்தரும் விளையாடிக் கொண்டு இருக்கிறார்கள். 150 வந்தாலே பெரிய விஷயம் என்று நினைக்கிறோம்.

Monday, September 26, 2011

கூகிள் தேடல் - ஒரு எளிமையான வழிமுறை


கூகிள் தேடல் - ஒரு எளிமையான வழிமுறை


கூகிளை உபயோகித்து நாம் விரும்பும் விஷயங்களை தேடி டவுன்லோட் செய்துகொள்ள முடிகிறது. ஆனாலும் சில சமயங்களில் நம்முடைய தேடல் சரியான result கொடுப்பதில்லை. இந்த சமயத்தில் நீங்கள் filestube என்கிற தளத்தினை உபயோகமாகப் படுத்திப் பார்க்கலாம். filestube உம் ஒருவகையான தேடல் தளம் தான். பெரும்பாலும் நாம் தேடுகிற விஷயம், ஏதாவது file sharing தளங்களில் ஏற்கனவே upload செய்யப் பட்டு இருக்கும். filestube தளமானது, இந்த file sharing தளங்களில் இருந்து நம்முடைய search word உள்ள அனைத்து link க்குகளை தேடிக்கொடுக்கும்.

சிறுதுளிகள் - (26/09/2011) - திங்கள்


உங்களுக்கு சினிமா பார்ப்பதில் மிகவும் ஆர்வம். உங்களுக்கு மிகவும் பிடித்த படம் ஏதாவது வெளிவந்துள்ளது அல்லது வரப்போகிறது என்று வைத்துக்கொள்வோம். இந்த நேரத்தில் யாராவது அந்த படத்தின் கதையோ அல்லது வேறு எதாவது தகவலோ சொல்லும் போது நாம் கேட்க மறுக்கின்றோம். காரணம், படம் பற்றிய சுவாரசியம் கெட்டுவிடும் என்பதால்.

Sunday, September 25, 2011

A Chinese Odyssey 1 Pandoras Box / உலக சினிமா / சீனா

புதிதாக பதிவு செய்ய ஆரம்பிக்கும் போது எழுதுவதற்கு விஷயங்கள் கிடைப்பது சிரமம். இதை தவிர்ப்பதற்கு நல்ல வழி, திரை விமர்சனங்கள் எழுதுவது என நண்பர் ஒருவர் யோசனை கொடுத்தார். நல்ல யோசனை தான் என நானும் எழுத முயற்சிக்கிறேன்.

A Chinese Odyssey 1 Pandoras Box

நான் பார்த்ததில் இது ஒரு நல்ல நகைச்சுவை படம். 1994 வெளிவந்த படம் தான் என்றாலும் இன்று பார்க்கும் போது கூட சுவாரசியமாகத்தான் இருக்கிறது,

தனித்துவம்

நாம் எல்லோருடைய மனதிலும், தன்னை பிறர் மதிக்க வேண்டும் என்றும், தன்னை பாராட்ட வேண்டும் என்றும் ஒரு எண்ணம் உள்ளுர ஓடிக்கொண்டே இருக்கும். தன்னை, தன் இருப்பை மற்றவர்கள் அங்கீகரிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எப்போதுமே இருக்கும். இதை இல்லை என்று தான் பெரும்பாலும் எல்லோரும் மறுப்போம். ஆனாலும் இது தான் நிஜம்.

Friday, September 23, 2011

எல்லோருக்கும் வணக்கம்


வாழ்க வையகம் ----------------------------------------------------------- வாழ்க வளமுடன்

அதோ இதோ என்று ஒரு வழியாக நானும் பிளாஃகிங் ஆரம்பித்து விட்டேன்.