Wednesday, September 28, 2011

Flipped (2010)/உலக சினிமா/அமெரிக்கா - ஆங்கில பட விமர்சனம்.


உங்களுக்கு ஆங்கில டிராமா படங்கள் பார்க்க பிடிக்கும் என்றால், இது மிகவும் பார்க்கவேண்டிய படங்களில் ஒன்று. படத்தின் கதை இதுதான்.



ஜூலியின் பக்கத்து வீட்டிற்கு புதிதாக குடிவரும் பிரைஸ் மீது ஜூலிக்கு கண்டதும் காதல். இது நடந்தபோது ஜூலிக்கு 7 வயது. பிரைஸ்க்கு ஜூலி தன்னை விடாமல் தொந்திரவு செய்கிறாள் என்று கோபம். இருவரும் ஒரே பள்ளியில் செர்கிறார்கள். இவர்கள் இருவருக்கும் இடையே நடக்கும் நிகழ்ச்சிகளை ஜூலி மற்றும் பிரைஸ்ன் பார்வையில் சொல்லப்பட்டு இருக்கும். ஒவ்வொரு நிகழ்ச்சிகளிலும் பிரைஸ் நடந்து கொள்ளும் முறையைப் பார்த்து கொஞ்சம் கொஞ்சமாக ஜூலிக்கு பிரைஸின் மேலிருந்த காதல் குறைகிறது. ஒரு கட்டத்தில் பிரைஸ் தான் நினைத்தது போன்ற கேரக்டர் கொண்டவன் அல்ல என்று உணர்ந்து ஜூலி அவனை விட்டு விலகிப்போக ஆரம்பிக்கிறாள். இந்த நேரத்தில் கொஞ்சம் கொஞ்சமாக ஜூலியின் கேரக்டரால் கவரப் பட்டு பிரைஸ்க்கு ஜூலி மேல் காதல் வருகிறது.

ஜூலி முதன்முறையாக பிரைஸ் சந்திக்கும் காட்சியைப் பாருங்கள்.

ஜூலியின் பார்வையில்


பிரைஸ்ன் பார்வையில்


படம் முழுக்க இது போன்ற காட்சிகள்தான். டிராமா வகைச்சேர்ந்த படம் என்றாலும் கொஞ்சம் கூட போர் அடிக்காமல் எடுத்து இருப்பது பாராட்டுக்குரியது. 1960 களில் அமெரிக்க குடும்பங்கள் இருந்த நிலை நன்றாக காட்சியமைக்கப் பட்டுள்ளது.
ஒரே காட்சியை மீண்டும் ஒரு முறை காட்டினாலும் அதை ரசிக்கும் வகையில் எடுத்துள்ளார்கள். படம் பார்த்து விட்டு உங்கள் கருத்தை சொல்லுங்கள்.

2 comments:

Gowtham GA said...

மிகவும் அருமை தோழரே...

இப்படிக்கு,
கெளதம் G.A
http://www.gowthampages.blogspot.com

Bala said...

Saro, Gowtham வருகைக்கும், கருத்திற்கும் நன்றி.

Post a Comment