புதிதாக பதிவு செய்ய ஆரம்பிக்கும் போது எழுதுவதற்கு விஷயங்கள் கிடைப்பது சிரமம். இதை தவிர்ப்பதற்கு நல்ல வழி, திரை விமர்சனங்கள் எழுதுவது என நண்பர் ஒருவர் யோசனை கொடுத்தார். நல்ல யோசனை தான் என நானும் எழுத முயற்சிக்கிறேன்.
A Chinese Odyssey 1 Pandoras Box
நான் பார்த்ததில் இது ஒரு நல்ல நகைச்சுவை படம். 1994 வெளிவந்த படம் தான் என்றாலும் இன்று பார்க்கும் போது கூட சுவாரசியமாகத்தான் இருக்கிறது,
படத்தின் கதை என்னவோ கொஞ்சம் குழப்பம் தர கூடியதுதான்.
குரங்கு ராஜா தான் படத்தின் நாயகன். குரங்கு ராஜா ஒரு துறவிக்கு (Longevity Monk) உதவி செய்வதாக Buddha விடம் வாக்குறுதி கொடுத்து விடுகிறார். ஆனால் அதை செய்யாமல், எருமை ராஜாவுடன் சேர்ந்து துறவியை கொன்று தின்ன முயற்சி செய்கிறார். அப்படி செய்திருந்தால் அவர்களுக்கு சாகாவரம் கிடைத்திருக்கும். அது முடியாமல் போகவே, purple fairy யிடம் இருந்து Pandoras Box திருடி கொண்டு தப்பிக்க நினைக்கிறார். இதனால் கோபம் அடைந்த கடவுள், குரங்கு ராஜாவை கொல்லும் போது, துறவி(Longevity Monk) குரங்கு ராஜாவின் செயலுக்கு பொறுப்பேற்று தன் உயிரை எடுத்துக் கொள்ளுமாறு கேட்கிறார். கடவுள் அதற்கு ஒப்புக் கொண்டு, குரங்கு ராஜா மனிதனாக பிறக்குமாறு சபித்து விடுகிறார். மனிதனாக பிறந்த குரங்கு ராஜா பாலைவனத்தில் பயணம் செய்பவர்களிடம் கொள்ளை அடிக்கும் கொள்ளை கூட்டத்தலைவனாக இருக்கிறார். குரங்கு ராஜாவுக்கு சாபத்தின் காரணமாக முன் ஜென்ம நினைவுகள் எல்லாம் மறந்து விட்டன.
அவர்கள் இருக்கும் இடத்திற்கு ஒரு பெண் பிசாசு வருகிறது. ஏனென்றால் துறவி (Longevity Monk) மறுபிறவி எடுத்து குரங்கு ராஜாவை சந்திக்க அங்கு தான் வரப்போகிறார். பிசாசை துரத்தி அடிக்க குரங்கு ராஜாவும், கொள்ளை கூட்டத்தினரும் செய்யும் முயற்சிகளும் அதன் விளைவுகளும் நன்றாக எடுக்கப்பட்டு இருக்கிறது. இதற்கிடையில் இன்னொரு பெண் பிசாசும் அதே இடத்திற்கு குரங்கு ராஜாவை பழி வாங்க தேடி வருகிறது. குரங்கு ராஜா இரண்டாவதாக வந்த பிசாசினை திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றி விட்டிருந்தார்.
இந்த இரண்டு பிசாசுகளும் துறவியைப் (Longevity Monk) பற்றி தெரிந்து கொண்டு, அவரை கண்டு பிடிக்க முயற்சி செய்கிறார்கள். எருமை ராஜாவுக்கும் துறவியைப் (Longevity Monk) பற்றிய செய்தி தெரியவர அதுவும் பாலைவனத்திற்கு படையுடன் வருகிறது.
குரங்கு ராஜா முன் ஜென்ம நினைவுகளை எப்படி பெற்று துறவியை (Longevity Monk) காப்பாற்றுகிறார் என்பதுதான் மீதி கதை.
படத்தில் குறிப்பிடத்தக்க காட்சிகள்.
குரங்கு ராஜா கொள்ளை கூட்டத்தோடு சென்று, இரண்டு பிசாசுகளையும் கொல்ல முயற்சி செய்யும் காட்சி. எல்லோரும் மாயமாக மறைய - மந்திர வார்த்தை எழுதப்பட்ட காகித துண்டுகளை மட்டும் கட்டிக்கொண்டு போவார்கள். குரங்கு ராஜாவுடைய காகித துண்டுகளில் தீ பிடிக்க, எல்லோரும் கூடி அதை அணைக்கும் காட்சி நிச்சையமாக வயிறு வலிக்க வைக்கும்.
கிளைமேக்சில், குரங்கு ராஜா Pandoras Box உபயோகித்து time travel செய்வது நல்ல நகைச்சுவையான காட்சி.
படம் முழுவதுமே ஒரு பெரிய football மைதானத்தில் செட் போட்டு எடுத்திருந்தாலும், படம் என்னவோ நன்றாக வந்திருந்தது. குரங்கு ராஜாவாக நடித்தவர் - stephon chow - சிலவருடங்களுக்கு முன்னால் வந்த - Kungfu hustle மற்றும் Shalion Soccer படங்களின் ஹீரோவும் அவர்தான். இந்த படத்தின் வெற்றியை பார்த்து இந்த படத்திற்கு இரண்டாம் பாகமும் வெளிவந்தது.
youtube ல் இந்த படம் நல்ல தரமான பிரிண்ட் உள்ளது. படம் பார்த்து விட்டு உங்கள் கருத்துகளை கூறுங்கள்.

No comments:
Post a Comment