Sunday, October 16, 2011

We're No Angels(1989)/உலக சினிமா/அமெரிக்கா - ஆங்கில பட விமர்சனம்



இந்தப் படம் காமெடியையும், திரில்லிங்கையும் கலந்து எடுக்கப் பட்டது. படத்தின் கதை இதுதான். நெட்(De Niro)டும், ஜிம்மி(Sean Penn)யும் சிறையில் இருக்கிறார்கள். அங்கிருந்து ஒரு கைதி தப்பிக்கும் போது, இவர்களும் கூட சேர்ந்து தப்பிக்க நேர்கிறது. இவர்கள் இருவரும் சிறைக்கு அருகில் உள்ள ஒரு கிராமத்திற்கு வருகிறார்கள்.

அந்த கிராமம் கனடா எல்லைக்கு அருகில் இருக்கிறது. ஒரு ஆற்றுப்பாலத்தைக் கடந்து கனடாவுக்கு சென்று விட்டால் முழுமையாகத் தப்பித்து விடலாம். அந்த கிராமத்திற்கு போகும்போது, இவர்கள் இருவரையும் காணாமல் போன இரண்டு பாதிரியார்கள் என அந்த ஊர் நினைக்கிறது.

De Niro வும் Sean Penn னும் தப்பிக்கும் வரை சர்ச்சில் ஒளிந்து இருக்கலாம் என நினைத்து பாதிரியார்களாக நடிக்க ஆரம்பிக்கிறார்கள். ஒவ்வொரு முறையும் ஆற்றுப்பாலத்தைக் கடக்க முயற்சிக்கும்போது எதாவது தடங்கல் வந்து விடுகிறது.

இதற்கிடையில் அந்த ஊரிலிருக்கும் டெமி மூர் மீது De Niro வுக்கு விருப்பம் ஏற்படுகிறது. டெமி மூருக்கு காது கேளாத வாய் பேசாத குழந்தை ஒன்று இருக்கிறது.  சர்ச்சில் இருக்கும் ஒரு பாதிரியார், Sean Penn வாய்க்கு வந்தபடி ஏதேதோ சொல்வதையெல்லாம் போதனை என்று எடுத்துக் கொண்டு அப்படியே செய்ய ஆரம்பிக்கிறார்.அப்படி செய்பவரைப்பார்த்து Sean Penn க்கும் மனமாற்றம் ஏற்படுகிறது.

தப்பித்த கைதிகளைத் தேடி சிறைச்சாலை வார்டன் அந்த ஊருக்கு வந்து சேர்கிறார். வார்டனும், அந்த ஊர் காவலர்களும் நாய்களை வைத்துக் கொண்டு வீடு வீடாக தேட ஆரம்பிக்கிறார்கள். நெட்டும் ஜிம்மியும் தப்பித்தார்களா, நெட்டின் காதல் என்னவானது என்பதைப் படம் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

படத்தின் குறிப்பிடத்தக்க காட்சிகள் - அவர்கள் இருவரும் பாலத்தைக் கடக்க ஒவ்வொரு முறையும் செல்லும்போது, என்ன ஆகும் என்ற பதபதைப்பு படம் பார்க்கும் நமக்கு வருவதை தவிர்க்க முடிவதில்லை. De Niro வும் Sean Penn னும் நன்றாக நடித்து உள்ளார்கள்.

படத்தின் டிரைலர்


இந்தப் படம் youtube ல் நல்ல தரமான பிரிண்டோடு உள்ளது.


2 comments:

kumaran said...

அசத்தலான பதிவு..பார்க்க போறேன் உடனே படத்தை..அறிமுகம் படுத்தியதற்கு ரொம்ப நன்றி.

dhiraviyam said...

//இந்தப் படம் youtube ல் நல்ல தரமான பிரிண்டோடு உள்ளது.

I like this.. Pathuduvom....

Post a Comment