வீட்டுக்கடனை அடைப்பதற்காகவும், ஆடம்பர செலவு செய்யும் மனைவியை சமாளிக்கவும், ஒரே ஒரு பொய் சொல்லி வேலைக்கு சேர்வதால் ஒருவன் படும் பாடு என்ன என்பதை சொல்லியிருக்கும் படம்.
'மைக்' கும் ஜென்னி யும் திருமணமானவர்கள். மைக் வாங்கும் சம்பளத்தில் குடும்பத்தை ஓட்டுவதென்பதே பெரிய விஷயமாக இருக்கிறது. மனைவிக்கு நினைத்தப் படி செலவு செய்ய முடியவில்லை என்ற வருத்தம். அந்த நேரத்தில் மைக்கின் நண்பன், அவன் கம்பெனியில் ஒரு வேலை காலியாக இருப்பதாக் கூறுகிறான். அதில் சேர்ந்தால் இப்போது வாங்கும் அளவை விட இரண்டு மடங்கு சம்பளம் கிடைக்கும் என்பதால் மைக்கும் ஒத்துக் கொண்டு இண்டர்வியூ செல்கிறான். அது ஒரு செண்ட் கம்பெனி, அதன் பாஸ் மேண்டி ஒரு பெண். மேண்டிக்கு தன்னிடம் வேலை செய்பவர்களுக்கு திருமணம் ஆகியிருக்க கூடாது என்ற ரூல் வைத்திருக்கிறாள். பணம் அதிகமாகக் கிடைப்பதால் மைக் தனக்கு திருமணம் ஆகவில்லை என்று பொய் சொல்லி வேலைக்கு சேர்கிறான்.
மைக் வேலைக்கு சேர்ந்த அந்த கம்பெனி இருக்கும் கட்டிடத்தில் தான் ஜென்னியும் வேலை செய்கிறாள். இப்படி ஒரு பொய் சொன்னதை அவன் ஜென்னியிடம் முதலில் சொல்லாமல் மறைத்து விடுகிறான். பின்னாளில் ஜென்னிக்கு இந்த விஷயம் தெரிய வருகிறது. சிறிய சண்டைக்கு பின் ஜென்னி சமாதானம் ஆகிறாள். இதற்கிடையில் மேண்டிக்கு மைக்கின் மேல் ஒரு நல்ல அபிப்ராயம் வருகிறது. ஒரு நாள் மேண்டி, மைக்கை காரில் கொண்டு வந்து விடுவதை ஜென்னி பார்த்து கோபப் பட்டு மைக்குடன் சண்டையிடுகிறாள்.
இதற்கிடையே மைக்கும் மேண்டியும் அலுவலக வேலையாக வெளியூர் செல்ல வேண்டி வருகிறது. இது ஜென்னியின் சந்தேகத்தை மேலும் அதிகரிக்கிறது. மைக், ஜென்னியின் திருமண வாழ்க்கை என்ன ஆனது என்பதை படம் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
இந்த படத்தில் சிறிது நகைச்சுவையோடு சொல்லியிருந்தாலும், மத்திய தர குடும்பத்தில் இருந்து வேலை செய்யும் ஆணும் பெண்ணும் பொருளாதாரத் தேவைகளை பூர்த்தி செய்ய வாழ்க்கையில் வளைந்து கொடுக்க வேண்டியிருப்பதை யதார்த்தமாக சொல்லியிருக்கும் விதம் மனதை கவர்கிறது. அப்படி வளைந்து கொடுப்பதால் நாம் இழக்கும் விஷயங்களின் மதிப்பை சில நேரங்களின் உணராமலேயே போய்விடுகிறோம். சில காட்சிகள் படம் பார்ப்பவரை நன்கு சிந்திக்க வைக்கின்றது.
மைக், ஜென்னியாக நடித்த இருவரும் மிக நன்றாக நடித்துள்ளனர். கொஞ்சம் கொஞ்சம் நம்ம ஊர் படத்தை ஞாபகப் படுத்தும் வகையில் உள்ளது. படத்தில் ஒரு பாடல் கூட உள்ளது. படம் பாருங்கள். கண்டிப்பக உங்களுக்கு பிடிக்கும்.
குறிப்பிடத்தக்க காட்சிகள்:
மைக் ஜென்னியிடம், உன்னுடைய கனவு என்ன என்று கேட்பான். "ஓன்றுமே செய்யாமல் ஒரு பணக்கார மனைவியாக இருக்க வேண்டும்" என்று ஜென்னி பதில் சொல்லுமிடம்.
மைக்கும் ஜென்னியும் சண்டையிடும் ஒரு காட்சியில் வரும் வசனங்கள்.. அப்பப்பா. யாரோ ஒருவன் ரொம்பவும் அனுபவித்து எழுதியிருக்கிறான். ஒரு குடும்ப சண்டையை மிகவும் தத்ரூபமாக காட்டியிருக்கிறார்கள். உதாரணத்திற்கு.
மைக்: "சண்டை போடும் போது தலையனை என் மேல் வீசாதே. அது என் அம்மா வாங்கிக் கொடுத்தது"
ஜென்னி: " அப்படியா, இது என் அப்பா வாங்கி கொடுத்தது, இதுவும் என் அப்பா வாங்கிக் கொடுத்தது" என்று சொல்லி பொருட்களை தூக்கி அவன் மேல் வீசுகிறாள்.
பார்க்க வேண்டிய படம்.
படத்தின் டிரைலர்
2 comments:
கொரியன் படங்களை அவ்வளவுவாக நான் பார்ப்பது இல்லை..ஆனால் இந்த படம் பார்க்க வேண்டும் போல் உள்ளது..
ராஜ் - வருகைக்கு நன்றி. அடிக்கடி வாருங்கள்.
Post a Comment