Saturday, November 12, 2011

Rio (2011)/உலக சினிமா/அமெரிக்கா - ஆங்கில படம்


இந்த படத்தைப் பற்றி ஒரு வார்த்தையில் சொல்ல வேண்டுமென்றால் - கலர்ஃபுல் - என்ற வார்த்தைதான் சரியாக இருக்கும்.

பிரேசிலின் தலை நகரமான ரியோவில் உள்ள ஒரு காட்டில் இருந்து படம் ஆரம்பிக்கிறது. படத்துவக்கத்தில் ஒரு பாடல் வரும் பாருங்கள். அதைக் கேட்கும் போதே நமக்கும் எழுந்து ஆடவேண்டும் போல இருக்கும். பிரேசிலில் அரிய வகைப் பறவைகள் அதிகம் உள்ளன. அவற்றை கடத்தி விற்பதற்கேன்றே ஒரு கூட்டம் இருக்கிறது. அப்படி ஒரு கூட்டம் பறவைகளை கடத்தி கொண்டு செல்லும்போது ஒரு அரிய வகை கிளிகுஞ்சு அடைக்கப் பட்டிருந்த கூண்டு எதேச்சையாக வண்டியில் இருந்து விழுந்து விடுகிறது. அதை கண்டெடுக்கும் ஒரு சிறுமி (Linda) கிளிகுஞ்சை எடுத்து வளர்க்கிறாள். அதற்கு "Blu" என்று பெயரும் வைக்கிறாள்.

பறவை என்றாலே பறக்கவேண்டும். ஆனால் புளுவிற்கு பறக்கத்தெரியாது. ஒரு நாள் லிண்டாவைப் பார்க்க ரியோவிலிருந்து ஒரு பறவை ஆராய்ச்சியாளர் வருகிறார். புளுதான் அந்த கிளி இனத்தின் கடைசி ஆண் பறவை என்ற செய்தியை சொல்லுகிறார். அந்த கிளி இனம் அழியாமல் போகவேண்டுமென்றால் புளுவை ரியோவுக்கு கொண்டு போய் அதே இனத்தைச் சேர்ந்த கடைசி பெண்கிளியுடன் சேர்த்து இனப்பெருக்கம் செய்யவேண்டும் என்று சொல்கிறார். லிண்டாவுக்கு விருப்பம் இல்லை என்றாலும் புளுவை எடுத்துக் கொண்டு ரியோ செல்கிறாள்.

புளு தன் இனத்தைச் சேர்ந்த பெண்கிளியை (Jewel) சந்திக்கிறது. சொல்லி வைத்தாற்போல் அந்த இடத்திலிருந்த எல்லா பறவைகளும் கடத்தப் படுகிறது. புளுவும் ஜ்வெலும் தப்பித்து பறக்கிறார்கள். புளுதான் பறக்க முடியாதே, எனவே தப்பித்து ஓடுகிறார்கள். பறவை கடத்தல்காரர்கள் புளுவையு ஜ்வெல்லையும் ஒரு சங்கிலியால் கட்டியிருந்ததால் இருவரும் சேர்ந்தே இருக்கவேண்டிய கட்டாயம். தப்பித்து ஓடும் போது சந்தித்த ஒரு பறவையிடம் சங்கிலியிலிருந்து விடுபட உதவி கேட்கிறார்கள். அந்தப் பறவையும் தன் நண்பனான ஒரு நாயிடம் சென்றால் சங்கிலியை துண்டிக்க முடியும் என்று நாயை சந்திக்க பயணிக்கிறார்கள்.

இதற்கிடையே பறவை கடத்தல்காரர்களின் கிளி புளுவை பிடிக்க பின் தொடர்கிறது. லிண்டாவும் புளுவைத் தேடியலைகிறாள். புளுவினால் சங்கிலியை துண்டித்து விடுதலை பெறமுடிந்ததா? லிண்டாவால் புளுவை கண்டுபிடிக்க முடிந்ததா? இதையெல்லாம் படம் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

படத்தின் குறிப்பிடத்த விஷயங்களில் ஒன்று. இசை. தமிழ் சினிமா போல் அங்கங்கே பாடல்கள் வருகின்றன. கேட்பதற்கு மிகவும் அருமையாக இருக்கிறது. படத்தில் காதல், நகைச்சுவை, விறுவிறுப்பு எல்லாம் சரியான விகிதத்தில் கலந்து இருக்கிறது. வில்லனின் அடியாட்களாக வரும் இருவர் செய்யும் கோமாளித்தனமான விசயங்கள் நல்ல சிரிப்பைத்தரும். அதேபோல வில்லனின் கிளி, குரங்கு கூட்டத்தை ஏவி விடுவதும், குரங்கு கூட்டத்திற்கும், பறவை கூட்டத்திற்கும் இடையே நடக்கும் சண்டை ரசிக்கத்தக்க ஒரு காட்சி. அனிமேசன் படங்களில் ஆர்வம் இல்லாதவர்கள் கூட இந்த படம் பார்த்தால் நிச்சயம் பிடிக்கும். பார்க்க வேண்டிய படங்களில் இதுவும் ஒன்று.

படத்தின் டிரைலர்

4 comments:

கேரளாக்காரன் said...

Awesome movie. Kiliya tholachittu kozhikku blue paint adichu vachuruppaanga paarunga masterpiece comedy

கேரளாக்காரன் said...

I like i wanna party song and all the birds have the feather song. Nice blog i am loving it

Bala said...

@ கேரளாக்காரன்(ஆனாலும் அதிரி புதிரி தமிழன்)
...வருகைக்கு நன்றி. அடிக்கடி இந்தப் பக்கம் வாங்க.

Dhiraviyam said...

Good story.....Will try to see this movie!

Post a Comment