Friday, November 25, 2011

The Fortune Buddies (2011)/உலக சினிமா/ சீனா - சீனப் படம்




இந்தப் படம் காமெடிபட வகையைச் சேர்ந்தது. ஷாப்பிங் மாலில் செக்யூரிட்டியாக வேலை பார்க்கும் ஒருத்தன் (செங்), இறந்து போனவர்களின் இறுதி சடங்குகளை ஏற்பாடு செய்யும் கம்பெனியில் வேலைப் பார்க்கும் ஒருத்தன் (லூக் வாங்). துணை நடிகனாக வேலை பார்க்கும் ஒருத்தன் (சாவோ லீ). இவர்கள் மூவரைச் சுற்றி நடக்கும் சம்பவங்கள் தான் கதை.



லூக் வாங்கின் காதலி ஒரு ரியல் எஸ்டேட் கம்பெனியில் வேலை பார்க்கிறாள். அவளை திருமணம் செய்வதற்கு, அவளின் தந்தை லூக் வாங்கிடம் ஒரு வேலை சொல்கிறார். 200,000 பணம் கொடுத்து அதை 6 மாதத்தில் 500,000 ஆக மாற்றிக்காட்ட வேண்டும் என்பதுதான் அது. பணத்தையும் கொடுத்து விட்டு பின்னாலேயே அதை பறிக்க ஆட்களையும் அனுப்பி பணத்தை திருடி விடுகிறார். லூக் வாங்கின் நண்பர்கள் அவனுக்கு உதவி செய்து 6 மாதத்தில் 500,000 பணம் புரட்ட முயற்சிக்கிறார்கள். அவர்களால் பணத்தை புரட்ட முடிந்ததா, லூக் வாங் தன் காதலியை திருமணம் செய்தானா என்பது தான் மீதிக் கதை.

பணம் சம்பாதிக்க அவர்கள் செய்யும் ஒவ்வொரு முயற்சியும் காமெடி ரகம். உதாரணத்திற்கு, நம்ம ஊர் தி நகர், ரங்க நாதன் தெரு போல அந்த ஊரில் இருக்கும் ஒரு தெருவில் பெர்பார்மென்ஸ் செய்து நாளொன்றுக்கு 3,000 வரை சம்பாதிக்கலாம் என்பது ஒரு ஐடியா. அதற்கு ஒரு பாடல் பாடி பெண் வேடத்தில் டான்ஸும் ஆடுவார்கள்.

அது ஒத்துவராமல் போக ஷாலோயின் மாங்க்காக நடிக்கும் இருவருடன் சேர்ந்து சண்டை போடுவதுபோல் போட்டு, பணம் வசூலிக்கிறார்கள். இது ஏறக்குறைய WWF சண்டைக் காட்சியை ஒத்தது. ஒரு நாள் WWF ல் சண்டைபோடும் ஒருவன் இவர்களுடன் சண்டைபோட்டு, தவறுதலாக கீழே விழுந்து தோற்றுவிடுகிறான். அதற்கு பழிவாங்க மீண்டும் ஒருமுறை சண்டை போடப்போவதாக TV வியில் சவால் விடுகிறான். அப்படி சண்டை போட ஒப்புக்கொண்டால், 500,000 பணம் தர சம்மதிக்கிறான். மூவரும் அதற்கு ஒப்புக்கொண்டு சண்டை போடப்போகிறார்கள்.

படம் முழுக்க சின்ன சின்ன ஜோக்குகள் தூவி இருக்கிறார் டைரக்டர். சிலது நன்றாக இருக்கிறது. சிலது மொக்கையாகவும் உள்ளது. சாவோ லீக்கும் செங்குக்கும் உள்ள பின்னணி கதையும் சொல்லப் பட்டுள்ளது. முழு நீள நகைச்சுவை படமெடுக்க முயற்சி செய்திருக்கிறார்கள். ஆனால் அது முழுமையடையவில்லை. பார்க்கலாம் என்கிற வகையில் இந்தப் படத்தை சேர்க்கலாம்.

குறிப்பிடத்தக்க காட்சிகள்:
படத்தின் மூன்று முக்கிய பாத்திரங்களின் அறிமுகக் காட்சிகள். அதிலும் செக்யூரிட்டியாக வேலை பார்ப்பவரின் அறிமுகக் காட்சி நல்ல காமெடி. உதவி நடிகனாக நடிப்பவனின் அறிமுகக் காட்சி. அந்த ஊர் பிரபல நடிகர்களை மிமிக்ரி செய்வது போல ஒரு வசனம் பேசியிருப்பார்.

செங்குக்கும், லூக் வாங்குக்கும் வேலை போய் விட, அவர்களையும் துணை நடிகர் வேலைக்கு சாவோ லீ அழைத்து செல்கிறான். முதல் நாள் ஷுட்டிங்கில் அவர்கள் இருவரும் செய்யும் காமெடியினால் சிரித்து, சிரித்து வயிறுதான் வலித்தது.

படத்தின் டிரைலர்



No comments:

Post a Comment