தமிழ் காமிக்ஸ் பற்றி எழுதிய முதல் பதிவுக்கு இங்கே செல்லவும்.
ராணி காமிக்ஸ் நிறுவனம், ஜேம்ஸ்பாண்ட் கதைகளை தமிழில் வெளியிட்டவரைக்கும் நன்றாகத்தான் இருந்தது. ஜேம்ஸ்பாண்ட் கதைகள் ஏறக்குறைய அனைத்தையுமே வெளியிட்டார்கள். அதன் பின்னர் ஜேம்ஸ்பாண்ட் கதைகளின் அளவுக்கு சுவாரசியமான கதைகள் கிடைக்காமல் கொஞ்ச நாள் இவர்களே நேரடியாக தமிழில் கதைகள் எழுதி வெளியிட்டார்கள். சந்தேகத்துக்கு இடமில்லாமல் அந்த கதைகள் எல்லாம் படுமோசமாக இருந்தது.
நல்லவேளையாக மற்றும் ஒரு ஹீரோ வந்து ராணிகாமிக்ஸை காப்பாற்றினார். அவர் தான் "முகமூடி வீரர் மாயாவி". மாயாவியை வைத்து மேலும் பலவருடங்களை நன்றாக ஒட்டினார்கள். கடைசியில் 500 வது வெளியிட்டுக்குப் பின்னர் ராணிகாமிக்ஸை நிறுத்தினார்கள். தமிழில் நிறைய பேருக்கு காமிக்ஸ் படிக்கும் வழக்கத்தைக் கொண்டுவந்தது ராணிகாமிக்ஸின் ஒரு பெரிய சாதனை என்றுதான் சொல்லவேண்டும்.
அதே காலகட்டத்தில் சிவகாசியில் இருந்து பிரகாஷ் பப்ளிசர்ஸ் மூலமாக வெளிவந்த முத்து காமிக்ஸ் மற்றொரு பிரபலமான தமிழ் காமிக்ஸாக இருந்தது. முத்து காமிக்ஸின் நிறுவியவர் - சவுந்திரபாண்டியன். முத்து காமிக்ஸ், ராணிகாமிக்ஸ் வர ஆரம்பிக்கும் முன்னரே வந்து கொண்டிருந்தது. நான் படிக்க ஆரம்பித்தது கொஞ்சம் லேட்டாகத்தான். முத்து காமிக்ஸ் ஒரு புதிய உலக அறிமுகப்படித்தியது என்றால் மிகையில்லை. காரணம் - முத்து காமிக்ஸ் நிறுவனர், அயல் நாடுகளில் வெளிவந்து நன்றாக விற்பனை ஆகிக்கொண்டிருக்கும் நல்ல கதையம்சம் கொண்ட கதைகளின் தமிழ் உரிமையைப் பெற்று நமக்கு கொடுத்தார்கள்.
முத்து காமிக்ஸின் பெரு வெற்றியைத் தொடர்ந்து, அவர்களே மொத்தமாக நான்கு காமிக்ஸ் புத்தகங்களை வெளியிட்டார்கள். அவை - முத்து, லயன், மினிலயன், திகில் ஆகும். இவை நாலுமே மாதமொருமுறை வருபவை. இதில் இரண்டு காமிக்ஸ்கள் மாதத்தில் 1 ஆம் தேதியும் மீதமிரண்டு மாதத்தில் 16 ஆம் தேதியும் விற்பனைக்கு வரும். ஒவ்வொரு மாதமுமே தீபாவளி போல சென்றது.



இது பத்தாதென்று, தீபாவளி, பொங்கல் மற்றும் கோடை விடுமுறை சமயங்களில் மெகா ஸ்பெசல் என்று, நிறைய கதைகளை இணைத்து ஒரே புத்தகமாக வெளியிடுவார்கள்.
முத்து காமிக்ஸில் அறிமுகப் படுத்தப் பட்ட நிறைய ஹீரோக்களில் சில பேரை தமிழ் வாசகர்களுக்கு மிகவும் பிடித்து விட்டது. இரும்புக்கை மாயாவி - இதில் முதன்மையானவர். அதேபோல C.I.D லாரன்ஸ் & டேவிட் கூட்டணி. ஜானி நீரோ. இவர்களை மையமாக வைத்து பல கதைகள் வந்தன.
லயன் காமிக்ஸில் வந்தவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள். -கெளபாய் ஹீரோக்களில் பெயர் வாங்கிய கூட்டணி - டெக்ஸ் வில்லர், கிட் கார்சன், டைகர், கிட் வில்லர் (டெக்ஸின் மகன்). லக்கி லூக். இரும்பு மனிதன் ஆர்ச்சி, தாம்ஸன் & விக்டர். ஸ்பைடர் மேன். மாடஸ்டி பிளைசி & வில்லி கார்வின்.
கொஞ்சம் லேட்டாக (முத்து காமிக்ஸின் 300 வது இதழில்) அறிமுகப் படுத்தப்பட்டு - உடனேயே மிகுந்த வரவேற்பைப் பெற்றவர் - கேப்டன் டைகர்.
மற்ற கதாப்பாத்திரங்கள் - சிக் பில், மந்திரவாதி மாண்ட்ரேக், ரிப்போர்டர் ஜானி.
மேலே சொன்ன எல்லோரும் எதாவதொரு வகையில் அநீதியை எதிர்த்துப் போராடுபவர்கள். இந்த வகையில் இல்லாத ஒரு ஹீரோ - XIII. இவரைப் பற்றி மட்டுமே தனிப்பதிவு போடலாம் என்ற அளவுக்கு நிறைய உள்ளது.
இவர்கள் எல்லோரைப் பற்றி அடுத்த பதிவுகளில் பார்ப்போம்
6 comments:
அடடா . அம்புலி மாமா, ராணி காமிக்ஸ், இரும்புக்கை மாயாவி, மாயாஜாலக் கதை இதெல்லாம் அப்போதைய பைபிள் எனக்கு. ஒரு புத்தகமாவது கிடைக்காதா என இப்போதும் ஏங்குகிறேன்.
@ சிவகுமாரன் - வருகைக்கு நன்றி.
எனக்கும் அந்த ஆசை உண்டு. இப்போதைய கதைகளில் "கேப்டன் டைகர்" கதைகள் அந்த இடத்தை நிரப்புகின்றன. சமயமும் வாய்ப்பும் கிடைத்தால் அதை படித்துப் பாருங்கள்.
Did you notice "Dhaaya vilayaattu - free" in one of the comics? - business killadigal!!!
// இவர்களே நேரடியாக தமிழில் கதைகள் எழுதி வெளியிட்டார்கள். சந்தேகத்துக்கு இடமில்லாமல் அந்த கதைகள் எல்லாம் படுமோசமாக இருந்தது.//
நேரிடையாக தமிழில் எழுதி வெளியிட்டது ஓரிரண்டு கதைகளே. (மாதிரி சாம்பிள் இங்கே: ராணி காமிக்ஸ் - மாடஸ்தி - இளவரசியை தேடி ). மற்றவை அனைத்தும் இந்தியாவில் வெளிவந்த ஹிந்தி மொழி காமிக்ஸ் கதைகளின் தமிழாக்கமே.
//கொஞ்சம் லேட்டாக (முத்து காமிக்ஸின் 300 வது இதழில்) அறிமுகப் படுத்தப்பட்டு - உடனேயே மிகுந்த வரவேற்பைப் பெற்றவர் - கேப்டன் டைகர்//
நண்பரே, கேப்டன் டைகர் தமிழில் முதன்முதலில் தோன்றியது 1996ஆம் ஆண்டு ஜூலை மாதம் வெளிவந்த தங்க கல்லறை கதையின் முதல் பாகத்தில். இந்த புத்தக வெளியீட்டு எண்: 242
//Dhiraviyam said...
Did you notice "Dhaaya vilayaattu - free" in one of the comics? - business killadigal!!!//
இதில் என்ன பிசினெஸ் கில்லாடித்தனம் இருக்கிறது? சற்றே விளக்குங்களேன் திரவியம்?
//மற்றவை அனைத்தும் இந்தியாவில் வெளிவந்த ஹிந்தி மொழி காமிக்ஸ் கதைகளின் தமிழாக்கமே. //
Don't try to fool others
உங்க அரகுறை அறிவு மெய் சிலிர்க்க வைக்கிறது
கிந்தி காமிக்ஸ் மட்டும் எதில் இருந்து வந்தது
ஆங்கில தழுவல் ஆக அனைத்தும் ஆங்கில தழுவலே
Post a Comment