Saturday, November 26, 2011

Headhunters AKA Hodejegerne (2011) / உலக சினிமா / நார்வே படம்


அருமையான திரில்லர் படம் பார்க்க ஆசைப்பட்டால், இந்த படத்தை தேடிப்பிடித்து பாருங்கள். ரோஜர் - இவன் தான் படத்தின் மெயின் கேரக்டர். பெரிய நிறுவனங்களுக்கு தேவையான ஆட்களை தேடித்தரும் ஒரு நிறுவனத்தில் வேலை செய்கிறான்.  அவன் மனைவி, டயானா. அவளுக்காக விலை உயர்ந்த வீடு, நகைகள் மற்றும் உயர்தர வாழ்க்கை என பல விஷயங்களுக்கு நிறைய பணம் தேவைப்படுவதால், அரியவகை ஓவியங்களை திருடி விற்பதையும் செய்கிறான். இவனிடம் வேலைக்கு இண்டர்வியுவுக்கு வரும் பெரிய ஆட்களிடம் உள்ள ஓவியங்களைப் பற்றித் தெரிந்து கொண்டு, அவற்றை திருடுவான்.

நார்வேயில் பெரும்பாலான வீடுகளின் தனியாங்கி பாதுகாப்பை ஒரு பெரிய செக்யூரிட்டி கம்பெனிதான் செய்து வருகிறது. ஓவ்வொரு வீடுகளிலும் விடியோ கேமிராக்கள் மற்றும் அலாரம் பொருத்தப் பட்டிருக்கும். வீட்டு சொந்தக்காரர்களுக்க ஒரு பாஸ்வேர்ட் கொடுக்கப்படும். அந்த பாஸ்வேர்டை உபயோகித்தால் கேமிராக்களும், அலாரமும் இயங்காது. ரோஜர் செய்யும் திருட்டுகளுக்கு செக்யூரிட்டி கம்பெனியில் வேலை செய்யும் ஓவி என்ற செக்யூரிட்டி கார்டும் பார்ட்னர்.

டயானா ஒரு ஓவியக் கண்காட்சி திறப்பதற்கு ரோஜர் பண உதவி செய்கிறான். அந்த கண்காட்சியில் கிளாஸ் கிரீவ் என்பவனை சந்திக்கிறான். தன் பாட்டி தனக்கு எழுதி வைத்த அபார்ட்மெண்டை பார்த்துக் கொள்ள நார்வேக்கு வந்திருப்பதாக கிளாஸ் கூறுகிறான். GPS தொழில் நுட்பத்தில் ஈடுபட்டுள்ள ஒரு பெரிய கம்பெனியில் டைரக்டராக வேலை பார்த்தவன் கிளாஸ். இந்த விஷயம் ரோஜருக்கு ஒரு ஆர்வத்தை கொடுக்கிறது. காரணம், கிளாஸ் வேலை பார்த்த கம்பெனியின் போட்டிக் கம்பெனியான பாத் ஃபைண்டர்ஸ் (Path Finders) தலைமை பொறுப்புக்கு ரோஜர் ஆள் தேடிக்கொண்டிருக்கிறான். கிளாஸ் அந்த விஷயத்தில் ஆர்வம் காட்டவில்லை.

கிளாஸிடம் 100 மில்லியன் பெறுமானமுள்ள ஒரு ஓவியம் இருப்பதாக டயானா சொல்வதை கேட்டதும் ரோஜர் அதை திருட திட்டமிடுகிறான். கிளாஸிடம் மீண்டும் பேசும்போதுதான் அவன் மிலிட்டரியில் வேலை பார்த்த விஷயம் ரோஜருக்கு தெரிய வருகிறது. தொலைந்து போன/ ஒளிந்து கிடக்கும் மனிதர்களை தேடிக்கண்டு பிடிப்பதுதான் கிளாஸின் ஸ்பெசால்டி என்பதும் தெரிய வருகிறது. ரோஜர் கிளாஸிடம் பேசி அவனை பாத் ஃபைண்டர்ஸ் (Path Finders) தலைமை பொறுப்புக்கு விண்ணப்பிக்க சம்மதிக்க வைக்கிறான்.

கிளாஸ் வீட்டிலிருக்கும் ஓவியத்தை ரோஜர் திருடி விடுகிறான். திருடி விட்டு வரும்போதுதான் அவன் மனைவி டயானாவுக்கும் கிளாஸ்க்கும் தொடர்பு இருப்பது தெரியவருகிறது. இதனால் ஆத்திரமடைந்த ரோஜர், கிளாஸிற்கு பாத் ஃபைண்டர்ஸ் (Path Finders) தலைமை பொறுப்பு கிடைக்க விடாமல் செய்கிறான். அடுத்த நாள் அவன் காரை எடுக்கும்போது காருக்குள் செக்யூரிட்டி கார்டு ஓவி செத்துக்கிடப்பதைப் பார்க்கிறான். கிளாஸ் தன்னை கொல்ல வைத்த பொறியில் ஓவி மாட்டி செத்ததாகக் கருதி ஓவியின் உடம்பை மறைக்க செல்கிறான். அவனை கொல்ல பின்னாலேயே கிளாஸும் துரத்துகிறான்.

அப்போது ஆரம்பிக்கிறது அந்தத் துரத்தல். கிளாஸ் ரோஜரை கொல்கிறானா இல்லையா என்பதைப் படம் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

குறிப்பிடத்தக்க காட்சிகள்: நிறைய காட்சிகளை சொல்லலாம். கிளாசிடமிருந்து தப்பிக்க கழிவறையில் ரோஜர் ஒளிந்து கொள்ளும் காட்சி. மலையிலிருந்து விழுந்த காரில் செத்தவன் போல நடிப்பதும், அதன் பின்னர், மொட்டை அடிக்கும் போது வரும் அழுகையும் நன்றாக உணர்ந்து நடித்துள்ளார். படத்தில் வரும் அத்தனை காட்சிகளுமே நன்றாக செதுக்கப் பட்ட காட்சிகள். ஒரு காட்சிகூட தேவையில்லாதது என சொல்ல முடியாது. அதேபோல ஒவ்வொரு காட்சியும் படத்தின் முடிவில் மிகச்சரியாக கோர்க்கப் பட்டுள்ளன. இது கண்டிப்பாகப் பார்க்கவேண்டிய படம்.

படத்தின் டிரைலர்


4 comments:

Unknown said...

very nice review.

Bala said...

@வெண் புரவி. Thanks for visiting. Do visit often.

ராஜ் said...

நல்ல விமர்சனம்...இதை போல் நல்ல திரைப்படங்களை அறிமுகபடுத்துங்கள்

Bala said...

ராஜ் - வருகைக்கு நன்றி. இந்தப் படம் எதேச்சையாகத்தான் பார்த்தேன். ரொம்ப நன்றாக இருந்தது. நீங்களும் பாருங்கள்.

Post a Comment