Sunday, June 3, 2012

உடல் ஆரோக்கியம்


உடல் ஆரோக்கியம்

"உடம்பால் அழிவார் உயிரால் அழிவார்"

"உடம்பை வளர்த்தேன் உயிரை வளர்த்தேன்"

"சுவரை வைத்துதான் சித்திரம் வரைய வேண்டும்" என்றெல்லாம் பொன்மொழிகள் கூறி உடல் ஆரோக்கியத்தை பேணவேண்டிய அவசியத்தை நம் முன்னோர்கள் சொல்லியிருக்கிறார்கள்.

Tuesday, January 3, 2012

தமிழ் காமிக்ஸ் - படக்கதைகள் - 3


தமிழ் காமிக்ஸ் - படக்கதைகள் - 1  - தமிழ் காமிக்ஸ் - படக்கதைகள் - 2


முத்து காமிக்ஸ் படிக்க ஆரம்பித்ததும் தெரிய வந்த முதல் காமிக்ஸ் ஹீரோ - இரும்புக்கை மாயாவி. அவரின் இயற்பெயர் - லூயிஸ் கிராண்டேல். ஆனாலும் அவரை மாயாவி என்றுதான் ஞாபகம் இருக்கிறது. ஆய்வுக்கூடத்தில் ஏற்பட்ட ஒரு விபத்தின் காரணமாக அவருக்கு மின்சாரத்தை தொட்டால் மாயமாக மறையும் தன்மை வரும். எடுத்துக்கொண்ட மின்சாரத்தின் அளவைப் பொறுத்து மாயமாக மறைந்து இருக்கும் நேரம் மாறுபடும்.

Friday, December 30, 2011

Shall We Dance (2004)/உலக சினிமா/அமெரிக்கா - ஆங்கில படம்


மனித மனம் எப்போதுமே ஒரு துடிப்பை, ஒரு புதிய அனுபவத்தை எதிர் நோக்கியபடியே இருக்கிறது. அப்படி ஒரு விஷயம் வாழ்க்கையில் இல்லாதபோது அதற்காக ஏங்குகிறது. அந்த ஏக்கத்தை புரிந்து கொள்ளாமல் எல்லா நாளுமே ஒரே மாதிரியாக கழிந்து கொண்டிருந்தால் காலப் போக்கில் ஒரு எந்திரமாக வாழ பழகி தன் இயல்பை தொலைத்து விடுகிறோம். இப்படி தொலைத்தது கூட தெரியாமலேயே வாழ்க்கையை கழித்தவர்கள் தான் ஏராளம். மத்திம வயதை கடந்தவர்களிடம் பேசிப் பார்த்தால், பெரும்பாலானோர் சொல்வது "என்னமோ வாழ்க்கை ஒடிக் கொண்டு இருக்கு" என்ற விரக்தியான பதிலாக இருக்கும். நம் முகத்திலேயே அந்த சலிப்பும் ஒரு வகையான சோகமும் தெரியும்.

Wednesday, December 28, 2011

Spirit: Stallion of the Cimarron (2002)/உலக சினிமா/அமெரிக்கா - ஆங்கில படம்




நானே ராஜா நானே மந்திரி என்று சுதந்திரமாக சுற்றிக் கொண்டு இருக்கும் உங்களை அடிமைப்படுத்தி அடிமாட்டு வேலை செய்யவைத்தால் எப்படி இருக்கும். இழந்த சுதந்திரத்தை பெற உயிர் இருக்கும் வரை போராடுவீர்கள்தானே. சுதந்திரம் என்பது மனிதனுக்கும் மிருகத்திற்கும் வேறு வேறா என்ன? காட்டில் சுதந்திரமாக சுற்றிக் கொண்டிருந்த ஸ்பிரிட் என்ற பெயர் கொண்ட ஸ்டாலியன் வகையைச் சேர்ந்த குதிரையைப் பற்றிய கதை தான் இந்தப் படம்.

Thursday, December 15, 2011

Seven Days AKA Se-beun De-i-jeu (2007)/உலக சினிமா / கொரியா



கிரைம் திரில்லர் படம் வகையில் இது ஒரு நல்ல படம்.

யோ ஜின் ஒரு திறமையான வழக்கறிஞர். அவள் எடுத்துக் கொண்ட எந்த வழக்கிலும் தோல்வி கண்டது கிடையாது. அவளுக்கு ஐந்து வயதில் ஒரு மகள். பள்ளியில் நடக்கும் ஒரு விழாவின் போது யோ ஜின்னின் மகள் கடத்தப் படுகிறாள். மகளை திரும்ப பெறவேண்டுமானால், தூக்கு தண்டனை கிடைக்கப் போகும் நிலையில் உள்ள ஒருவனை அந்த கேஸிலிருந்து விடுதலை வாங்கித்தரவேண்டும். அதற்கு நான்கு நாட்கள் தான் அவகாசம். யோ ஜின்னால் வழக்கில் வெற்றி பெறமுடிந்ததா, மகளை திரும்ப பெற்றாளா என்பதுதான் மீதிக் கதை.

Tuesday, November 29, 2011

நிறைய வலைத்தளங்களை தொடர ஒரு எளிய வழி


நாம் ஒவ்வொருவரும் நிறைய வலைத்தளங்களை தொடர்ந்து படித்துக்கொண்டிருப்போம். ஒவ்வொரு நாளும் இணையத்தில் நுழையும் போது, விருப்பமான வலைத்தளங்களில் ஏதேனும் புதிய பதிவு வந்துள்ளதா என பார்த்து விட்டு தான் வேறு தளங்களைப் பார்ப்போம்.

Sunday, November 27, 2011

தமிழ் காமிக்ஸ் - படக்கதைகள் - 2


தமிழ் காமிக்ஸ் பற்றி எழுதிய முதல் பதிவுக்கு இங்கே செல்லவும்.

ராணி காமிக்ஸ் நிறுவனம், ஜேம்ஸ்பாண்ட் கதைகளை தமிழில் வெளியிட்டவரைக்கும் நன்றாகத்தான் இருந்தது. ஜேம்ஸ்பாண்ட் கதைகள் ஏறக்குறைய அனைத்தையுமே வெளியிட்டார்கள். அதன் பின்னர் ஜேம்ஸ்பாண்ட் கதைகளின் அளவுக்கு சுவாரசியமான கதைகள் கிடைக்காமல் கொஞ்ச நாள் இவர்களே நேரடியாக தமிழில் கதைகள் எழுதி வெளியிட்டார்கள். சந்தேகத்துக்கு இடமில்லாமல் அந்த கதைகள் எல்லாம் படுமோசமாக இருந்தது.