Sunday, June 3, 2012

உடல் ஆரோக்கியம்


உடல் ஆரோக்கியம்

"உடம்பால் அழிவார் உயிரால் அழிவார்"

"உடம்பை வளர்த்தேன் உயிரை வளர்த்தேன்"

"சுவரை வைத்துதான் சித்திரம் வரைய வேண்டும்" என்றெல்லாம் பொன்மொழிகள் கூறி உடல் ஆரோக்கியத்தை பேணவேண்டிய அவசியத்தை நம் முன்னோர்கள் சொல்லியிருக்கிறார்கள்.



ஒரு 10 அல்லது 20 வருசத்திற்கு முன்னாடி இருந்த மருத்துவ வசதிகளையும் இப்போ இருக்கிற வசதிகளையும் ஒப்பிட்டு பாருங்க. இன்னைக்கு மருத்துவ துறையில் ரொம்பவும் குறிப்பிடத்தக்க வகையில் பெரிய அளவில முன்னேற்றம் கண்டிருக்கோம். அப்போ மக்களோட ஆரோக்கியமும் அதே அளவிற்கு முன்னேறி இருக்கனும். அப்படி இருக்கான்னா, இல்லைன்னுதான் சொல்லமுடியும். ஏன் இப்படி இருக்குன்னு நாம என்னைக்காவது யோசிச்சு பாத்திருக்கோமா?

சமீபத்தில் இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வாரின் பேச்சை கேட்க நேரிட்டது. அதன் சாராம்சம்.

இப்போதெல்லாம் ஒரு பெண் கருவுற்றிருக்கிறாள் என்று தெரிய வந்தவுடன் முதலில் செய்வது ஒரு நல்ல டாக்டரைப் பார்த்து செக்கப் செய்து கொள்கிறோம். அவரவர் வசதி வாய்ப்புக்குத் தகுந்தாற்போல் அரசு மருத்துவமனையில் ஆரம்பித்து மிகப் பெரிய தனியார் மருத்துவமனை வரைக்கு போகிறோம். மருத்துவமனைக்குத் தகுந்தாற்போல் பிளட் டெஸ்ட், யூரின் டெஸ்ட், ஸ்கேன் என்று எல்லா டெஸ்ட்களும் எடுத்துவிட்டு, பெரும்பாலும் சொல்வது 
"எல்லா டெஸ்ட் ரிசல்ட்டுமே நல்லா தான் வந்திருக்கு, ஆனா பெண்தான் கொஞ்சம் வீக்கா இருக்கு, விட்டமின் மாத்திரை தர்றேன், இதை சாப்பிட்டால் சரியாப் போய்டும்" என்று சொல்லி இரும்பு சத்து மாத்திரையும், ஃபோலிக் ஆசிட் மாத்திரையும் தினம் ஒன்று என்ற அளவில் எழுதிக் கொடுப்பார்கள். மறக்காமல் அடுத்த விசிட் எப்போது என்பதை சொல்லி அனுப்புவார்கள். அடுத்த விசிட்லயும் அதே இரும்பு சத்து மாத்திரையும், ஃபோலிக் ஆசிட் மாத்திரையும் வேற மருந்து கம்பெனி பேர்ல எழுதி கொடுப்பாங்க. இப்படி டாக்டர்ங்க சொல்ற எல்லாத்தையும் அப்படியே ஃபாலோ பண்ணி வந்தாலும் எத்தனை பேருக்கு சுகப்பிரசவம் நடக்குது. 

இது எப்படி இருக்குன்னா - வருசம் முழுமைக்கும் படிச்சிட்டு பரிட்சை எழுதும் போது நான் படிச்ச கேள்வி வரலைன்னு சொல்ற மாதிரி இருக்கு. அப்படியே காரணம்  சொல்றமாதிரி இருந்தாலும் எத்தனை தடவைதான் அதையே சொல்ல முடியும். ஆனா இன்னைக்கு எத்தனை சிசேரியன் நடக்குது. அப்போ ஏதோ ஒன்னு சரியில்லைன்னுதானே அர்த்தம்.

இந்த மாதிரியான ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகள் வர்றதுக்கு ஒரே ஒரு காரணம்தான். அது நாம உண்ணும் உணவு. அது எப்படின்னு தெரிஞ்சுக்க ரதி லோகநாதன் இயற்கை உணவைப் பற்றி எழுதிய "ஆரோக்கியம் ஆனந்தம்" பதிவைப் படிங்க. ரொம்ப அழகா நல்லா சொல்லியிருக்காங்க.

பதிவோட நிறுத்திடாம அவங்க அனுபவத்தையும் பகிர்ந்திருக்காங்க. அதையும் கேளுங்க.

உங்க கருத்துகளையும் மறக்காம பகிர்ந்துக்கோங்க.

No comments:

Post a Comment