Tuesday, November 29, 2011

நிறைய வலைத்தளங்களை தொடர ஒரு எளிய வழி


நாம் ஒவ்வொருவரும் நிறைய வலைத்தளங்களை தொடர்ந்து படித்துக்கொண்டிருப்போம். ஒவ்வொரு நாளும் இணையத்தில் நுழையும் போது, விருப்பமான வலைத்தளங்களில் ஏதேனும் புதிய பதிவு வந்துள்ளதா என பார்த்து விட்டு தான் வேறு தளங்களைப் பார்ப்போம்.


பெரும்பாலும் எல்லா வலைத்தளங்களையும் ஃபேவரிட்டாக சேர்த்து வைத்து விட்டு ஒவ்வொன்றாக திறந்து பார்க்கும் வழக்கம் இருக்கும். இது பல நேரங்களில் நேரம் பிடிக்கும் வேலையாகவும், ஒரு வலைத்தளத்தில் சுவாரசியமாக எதாவது படித்தால் அடுத்த வலையை பார்க்க மறந்து விடவும் வாய்ப்பு உள்ளது.

ஒவ்வொரு பிரவுசர்களிலும் ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட வலைத்தளங்களை திறக்கும் வசதியை கொடுத்துள்ளார்கள். இதை எதேச்சையாகத்தான் நான் தெரிந்து கொண்டேன். உங்களுக்கும் உதவுமா என்று பாருங்கள். இது பற்றி ஏற்கெனவே உங்களுக்கு தெரிந்து இருந்தால் மகிழ்ச்சி.

நான் உபயோகிப்பது - கூகிள் க்ரோம் மற்றும் இண்டர் நெட் எக்ஸ்புளோரர். இவையிரண்டிலும் இந்த வசதியை எப்படி உபயோகிப்பது என பார்க்கலாம்.

கூகிள் க்ரோம் - பிரவுசரில் "Options" தேர்வு செய்து கொள்ளவும். உதவிக்கு இந்த படத்தைப் பாருங்கள்.


ஒரு புதிய விண்டோ திறக்கும். அதில் "On Startup" என்ற தலைப்பின் கீழ் "Open the following pages:" என்ற வசதியை தேர்வு செய்து கொள்ளுங்கள். பின்னர் உங்களுக்கு பிடித்த வலைத்தள முகவரிகளை ஒன்றன்பின் ஒன்றாக சேர்த்துக் கொள்ளுங்கள். உதவிக்கு இந்த படத்தைப் பாருங்கள்.

இதன்பின் ஒவ்வொருமுறை நீங்கள் க்ரோம் பிரவுசரைத் திறக்கும்போதும் மேலே சேர்த்த எல்லா வலைத்தளங்களும் தனித்தனி "Tab" ல் திறக்கும்.

இண்டர் நெட் எக்ஸ்புளோரர் - பிரவுசரில் "Internet Options" தேர்வு செய்து கொள்ளவும். உதவிக்கு இந்த படத்தைப் பாருங்கள்.


ஒரு புதிய விண்டோ திறக்கும். அதில் "General" என்ற பிரிவின் கீழ் "Home Page" என்ற தலைப்பை பாருங்கள். அதற்கு கீழே உள்ள ஒரு "text box" ல் நீங்கள் விரும்பும் வலைத்தளங்களின் முகவரிகளை சேர்த்துக் கொள்ளவும். உதவிக்கு இந்த படத்தைப் பாருங்கள்.



இது உங்களுக்கு பயன்படும் என்றால் முயற்சி செய்து பாருங்கள். இந்த வசதியைப் பற்றி ஏற்கெனவே தெரியும் என்றால்....... :)

5 comments:

stalin wesley said...

இணைய இணைப்பின் வேகம் மெதுவாக இருந்தால்

இது நன்றாக இயங்க வில்லை சார் ...

Bala said...

@ stalin wesley - வருகைக்கு நன்றி. நீங்கள் சொன்னது சரிதான். இணைய இணைப்பு வேகம் குறைவாக இருக்கும்போது, இரண்டு அல்லது மூன்றுக்கு தளங்களை மட்டும் சேர்க்கலாம்.

Dhiraviyam said...

Thanks for info!

Ruthra said...

எனக்கு மிகவும் தேவையான தகவல் நன்றி

நேசமுடன்
ருத்ரா

Bala said...

@ருத்ரா - வருகைக்கு நன்றி.

Post a Comment