உணவே மருந்து. இதை உணர்ந்து இருக்கிறீர்களா? பசிக்கும் போது மட்டும் உண்டு, வயிறு நிரம்ப சாப்பிடாமல், கொஞ்சம் குறைவாக உண்டு வந்தால் எந்த நோயும் வராது. அப்படி உண்ணும் போது கூட நன்றாக மென்று விழுங்க வேண்டும். இதை என்னவோ நாம் ஆரம்பப் பள்ளியில் படிக்கும்போதே சொல்லிக் கொடுத்தார்கள்தான்.
Saturday, October 22, 2011
Sunday, October 16, 2011
We're No Angels(1989)/உலக சினிமா/அமெரிக்கா - ஆங்கில பட விமர்சனம்
இந்தப் படம் காமெடியையும், திரில்லிங்கையும் கலந்து எடுக்கப் பட்டது. படத்தின் கதை இதுதான். நெட்(De Niro)டும், ஜிம்மி(Sean Penn)யும் சிறையில் இருக்கிறார்கள். அங்கிருந்து ஒரு கைதி தப்பிக்கும் போது, இவர்களும் கூட சேர்ந்து தப்பிக்க நேர்கிறது. இவர்கள் இருவரும் சிறைக்கு அருகில் உள்ள ஒரு கிராமத்திற்கு வருகிறார்கள்.
Thursday, October 13, 2011
நேர்மறையும் எதிர்மறையும்
எதாவது புதிய விஷயம் முயற்சி செய்யலாம் என்று என்றைக்காவது யோசித்திருக்கிறீர்களா?. புதிய விஷயம் என்பது எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். புதிதாக தொழில் துவங்க ஆசைப்படலாம். உதாரணத்திற்கு குதிரை ஏற்றம், கராத்தே, இசைக்கருவி வாசித்தல் போன்ற எதையாவது ஒன்றை டைம் பாஸ்க்காகவோ அல்லது மனதிருப்திக்கோ கற்றுக்கொள்ள ஆசைப்படலாம்.
Sunday, October 9, 2011
சிறுதுளிகள் - (10/09/2011) - ஞாயிறு
கடைசியாக நீங்கள் யாருக்கு நன்றி சொன்னீர்கள் என்று நினைவு இருக்கிறதா?. வெறுமனே வாய் வார்த்தையாக இல்லாமல் உள்ளத்தில் இருந்து சொல்லியிருக்கவேண்டும். ரொம்ப நாட்களாகி இருக்கும்தானே. என்ன காரணத்தாலோ, நன்றியையும், மன்னிப்பையும் நமக்கு சொல்லவோ, கேட்கவோ அவ்வளவு எளிதாக முடிவதில்லை.
Saturday, October 8, 2011
விருப்பமான வேலைக்குப் போவது என்பது .....
அலுவலகத்தில் வேலை செய்பவர்களில் 99 சதவிகிதம் பேர், வெள்ளிக்கிழமை வரும்போது முகத்தில் 1000 வாட்ஸ் பல்ப் எரிவது போல சந்தோசமாக இருப்பார்கள். திங்கட்கிழமை வரும்போது ப்யூஸ் போன பல்ப்பாக முகம் மாறி இருக்கும். செய்யும் வேலை பிடித்து போய் சந்தோசமாக செய்பவர்கள் மிகமிக குறைவுதான்.
Saturday, October 1, 2011
சிறுதுளிகள் - (02/10/2011) - ஞாயிறு
ஒரு புது விஷயம் அரம்பிக்கிறோம் என்று வைத்துக்கொள்ளுங்கள். உதாரணத்திற்கு, உடற்பயிற்சி செய்ய ஆரம்பிக்கலாம். தியானம் கற்றுக்கொள்ளலாம். புத்தகம் வாசிக்கலாம். பிளாஃக் எழுத ஆரம்பிக்கலாம். காலையில் நேரமே எழ முயற்சிக்கலாம்.
12 Angry Men (1957)/உலக சினிமா/அமெரிக்கா - ஆங்கில பட விமர்சனம்
இந்த படம் ஆங்கில டிராமா வகையை சேர்ந்தது. பிளாக் அன் வொய்டில் எடுக்கப் பட்டது. இந்த படத்தின் கதையைப் பார்க்கும் முன்னர், அமெரிக்காவில் கோர்ட் சிஸ்டம் இயங்கும் முறையைப் பார்ப்போம். நம்ம ஊரில் எந்த ஒரு வழக்குக்கும் நீதிபதிதான் தீர்ப்பு வழங்குவார். அமெரிக்காவில் ஜூரி என்ற பெயரில், பொதுமக்களில் இருந்து 12 பேரைத் குலுக்கல் முறையில் தேர்ந்து எடுப்பார்கள்.
Subscribe to:
Posts (Atom)
