Monday, September 26, 2011

சிறுதுளிகள் - (26/09/2011) - திங்கள்


உங்களுக்கு சினிமா பார்ப்பதில் மிகவும் ஆர்வம். உங்களுக்கு மிகவும் பிடித்த படம் ஏதாவது வெளிவந்துள்ளது அல்லது வரப்போகிறது என்று வைத்துக்கொள்வோம். இந்த நேரத்தில் யாராவது அந்த படத்தின் கதையோ அல்லது வேறு எதாவது தகவலோ சொல்லும் போது நாம் கேட்க மறுக்கின்றோம். காரணம், படம் பற்றிய சுவாரசியம் கெட்டுவிடும் என்பதால்.

 ஆனால் நம்முடைய வாழ்க்கை என்று வரும் போது அந்த சுவாரசியத்தை எதிர்பார்க்கிறோமா என்றால் சிலசமயங்களில் இல்லை என்றுதான் சொல்லவேண்டும். நாளைக்கு என்ன நடக்கும், அடுத்த மாதம், அடுத்த வருடம் என்ன நடக்கும் என்று அறிய ஜோதிடர்களை நாடுகிறோம். சினிமா பார்க்கும்போது அடுத்தது என்ன நடக்கும் என்று தெரியாமல் பார்ப்பது தான் பிடித்து இருக்கிறது, ஆனால் வாழ்க்கை என்று வரும்போது அந்த சுவாரசியத்தை விரும்ப மறுக்கிறோம்....
-------------------------------------------------------------------------------------------------------------
ஒரு வயசுக்கு அப்புறம், தெரியாது என்று சொல்ல நாம் விரும்புவதில்லை. நமக்கு என்னவென்றே தெரியாத கேள்வி கேட்கப்பட்டாலும், எதாவது சொல்லி சமாளிக்கத்தான் மனம் விரும்புகிறது. தெரியாது என்று சொன்னால், நம்மை கேவலமாக நினைத்து விடுவார்களோ என்பதனால் பூசிமொழுகப் பார்க்க மனம் தூண்டுகிறது என நினைக்கிறேன். வேறு வழி இல்லாமல் தெரியாது என ஒப்புக்கொள்ள நேரும்போது ஒருவிதமான மனநிலைக்கு தள்ளப்படுகிறோம். அப்படி எல்லாம் இல்லை, தெரியாததை தெரியாது என்றுதான் நான் சொல்லுவேன் என்றால், உண்மையிலேயே நீங்கள் வல்லவர்தான் என்று சொல்வேன்.
-------------------------------------------------------------------------------------------------------------
பெரும்பாலான நேரங்களில் அம்மாவோ அல்லது மனைவியோ, நம்மை சாப்பிடச்சொல்லும்போது நமக்கு பசி இல்லை என்று தோன்றும். ஆனால் என்றாவது ஒரு நாள், சமைக்க கொஞ்சம் தாமதம் ஆகும் போது மட்டும் நமக்கு நன்றாக பசி வந்திருக்கும். இது போல இன்னும் சில விஷயங்கள் நடப்பதை பார்த்திருக்கலாம் அல்லது உணர்ந்திருக்கலாம். ரொம்பவும் famous ஆன விஷயம், ஏதாவது Queue வில் நிற்கும் போது, நாம் நிற்கும் Queue தவிர மற்ற Queue எல்லாம் வேகமாக நகருவதை போல் தோன்றும்....
-------------------------------------------------------------------------------------------------------------
பேருந்தில் செல்லும் போது பார்த்த விஷயம் இது. இளம்பெண்ணொருத்தி, பேருந்து ஒடிக்கொண்டிருந்த போதும், ஒரு சிறிய கண்ணாடியை வைத்துக்கொண்டு மேக்கப் போட்டு கொண்டு வந்தாள். எல்லாம் முடிந்த பின்னர், அந்த கையகல கண்ணாடியை வைத்து மீண்டும் ஒரு முறை எல்லாம் சரியாக உள்ளதா என சரிபார்த்து முடித்தாள். நானும் இத்துடன் முடிந்தது என நினைத்தேன். அவளுடைய செல்போன் எடுத்து முகத்தை மீண்டும் ஒரு முறை பார்த்தாள். எனக்கு முதலில் ஓன்றும் புரியவில்லை, பின்னர்தான் தெரிந்தது, செல்போனின் முன் பக்க கேமிராவின் மூலமாக அவள் முகத்தை பார்க்கிறாள் என்று.
Techology ஐ எப்படியெல்லாம் யூஸ் பண்றாங்கப்பா.

1 comment:

Post a Comment