Thursday, December 15, 2011

Seven Days AKA Se-beun De-i-jeu (2007)/உலக சினிமா / கொரியாகிரைம் திரில்லர் படம் வகையில் இது ஒரு நல்ல படம்.

யோ ஜின் ஒரு திறமையான வழக்கறிஞர். அவள் எடுத்துக் கொண்ட எந்த வழக்கிலும் தோல்வி கண்டது கிடையாது. அவளுக்கு ஐந்து வயதில் ஒரு மகள். பள்ளியில் நடக்கும் ஒரு விழாவின் போது யோ ஜின்னின் மகள் கடத்தப் படுகிறாள். மகளை திரும்ப பெறவேண்டுமானால், தூக்கு தண்டனை கிடைக்கப் போகும் நிலையில் உள்ள ஒருவனை அந்த கேஸிலிருந்து விடுதலை வாங்கித்தரவேண்டும். அதற்கு நான்கு நாட்கள் தான் அவகாசம். யோ ஜின்னால் வழக்கில் வெற்றி பெறமுடிந்ததா, மகளை திரும்ப பெற்றாளா என்பதுதான் மீதிக் கதை.தூக்குதண்டனை விதிக்கப் பட்ட சிஜே என்றவன் நல்லவன் கிடையாது. கல்லூரியில் படிக்கும் ஒர் பெண்ணை கொலைசெய்ததாக கைது செய்யப்பட்டு, தூக்கு தண்டனை விதிக்கப் படுகிறது. அவள் பெயர் - 'ஜாங்க்' கொல்லப் பட்ட பெண்ணின் அறையில் சிஜே வின் கைரேகைகள், காலடி தடங்கள் இருப்பதை போலீஸ் கண்டு பிடிக்கிறது. கூடவே, சிஜே வின் வால்ட்டும் அந்த பெண்ணின் அறையில் கிடக்கிறது. இந்த ஆதாரங்களை வைத்து சிஜே தான் கொலை செய்தான் என போலீஸ் உறுதி படுத்துகிறது.

வழக்கு நடந்து கொண்டிருக்கும் போதே யோ ஜின் தன்னுடைய பால்ய கால நண்பன் 'கிம் மின் உதவியை நாடுகிறாள். கிம் 'ஒரு போலீஸ்காரன். ஆனால் கடத்தியவனுக்கு யோ ஜின்னின் செயல்பாடுகள் எல்லாம் எப்படியோ தெரிகிறது. அதுபோலவே போலீஸின் ஒவ்வொரு நடவடிக்கையும் தெரிந்து கொண்டு யோ ஜின்னை மிரட்டுகிறான். யோ ஜின்னுக்கோ வழக்கை ஜெயிப்பது தவிர வேறு வழியில்லை. வழக்கின் போக்கு அவள் நினைத்த படியில்லை.

கொலையை யார் செய்தார் என்பதை கண்டுபிடிக்கும் காட்சிகள். அதற்கான தடயங்களை சேகரிக்க யோ ஜின்னும் கிம்மும் படும்பாடுகள். கோர்ட்டில் நடக்கும் விவாதங்கள். சிஜேவை தனது வாதத்திறமையால் விடுவிப்பது என்று எல்லாக் காட்சிகளும் நல்ல திரைக்கதையமைப்பு தெரிகிறது. இதுவே படம் முழுவதும் விறுவிறுப்பு குறையாமல் இருக்க ஒரு காரணமாக இருக்கிறது. படத்தின் கிளைமாக்ஸ் - எதிர்பார்க்காத ஒன்று. படத்தின் ஆரம்பத்தில் யோ ஜின் தன்னுடைய கட்சிக்காரனான ஒரு தாதாவுக்கு கையடக்கமான டேப் ரிகார்டரை திருப்பிக் கொடுப்பாள். கடைசியில் அது அவளுக்கே திரும்ப கிடைப்பதும், அதன் மூலம் படத்தில் வரும் திருப்பமும் நல்ல காட்சியமைப்பு.


யோ ஜின் னாக நடித்தவர் (Yunjin Kim) நன்றாக நடித்துள்ளார். கொரியப் படங்கள் பல நேரங்களில் நம் தமிழ் படங்களை நினைவு படுத்தும். இந்தப் படத்திலும் அப்படி சில காட்சிகள் உள்ளன. திறமையான வழக்கறிஞர் என்பதால் மகளுடன் நேரம் செலவிடமுடியாமல் போவதை அவள் கடத்தப் பட்டதும் நினைத்து (இது ப்ளாஷ் பேக் காட்சியாக வரும்) வருந்துவதும் காட்சி ஒரு உதாரணம்.


இந்த படம் யூ ட்யூப்பில் நல்ல பிரிண்டில் இருக்கிறது.படத்தின் டிரைலர்.
4 comments:

Anonymous said...

World No.1 Money Making Site. 100% Without Investment Job.

Visit Here: http://adf.ly/4FKbj

Anonymous said...

World No.1 Money Making Site. 100% Without Investment Job.

Visit Here: http://adf.ly/4FKbj

Kumaran said...

அருமையான விமர்சனம்..தங்கள் எழுத்துக்களின் வழியே தெரிகிறது நல்ல படம் என்று..விரையில் பார்த்துவிடுகிறேன்.நன்றிகள்,

முகில் said...

@Kumaran - வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி.

Post a Comment